உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அடுத்த உலக கோப்பையான 24-வது போட்டி தொடர் மொராக்கோ, போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 2030-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஜூலை 21-ந்தேதி வரை நடக்கிறது.
1930-ம் ஆண்டு உலக கோப்பை உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது.
100-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, 1930 இறுதிப் போட்டி நடைபெற்ற உருகுவேயின் மான்டிவீடியோவில் உள்ள எஸ்டாடியோ சென்டனா ரியோ மைதானம், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள எஸ்டாடியோ மானுமென்டல், பராகுவேயின் அசுன்சியோனில் உள்ள எஸ்டாடியோ ஒஸ்வால்டோ டொமிங்கஸ் டிப் ஆகிய மைதானங்களில் தலா ஒரு ஆட்டம் என ஒரு சிறப்புப் போட்டியும், கொண்டாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

