ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதாக 15 நிர்ணயம் செய்து ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஆஸ்திரேலியா, மலேஷியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இன்னும் பல நாடுகள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலனை செய்து வருகின்றன.
இதனிடையே அரபு நாடுகளில் முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகட்ஸ், சமூக வலைதளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயதாக 15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

