மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!

0
4

லண்டன் நைட் கிளப் சர்ச்சை மற்றும் நள்ளிரவு ஒழுங்கீன விவகாரத்தில் சிக்கி, இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப தயாராகி வருகிறார்.

நாளை தொடங்கவுள்ள கவுண்டி சேம்பியன்ஷிப் போட்டியில், டர்ஹாம் (Durham) அணிக்காக ஸ்டோக்ஸ் களம் இறங்குகிறார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் விதியை மீறி லண்டன் நைட் கிளப் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட மோதலில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் (ECB) பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.

இதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவர்கள் இருவருக்கும் இடம் மறுக்கப்பட்டது.

தற்போது ஓவல் டெஸ்டில் அவருக்குப் பதிலாக ஜோ ரூட் அணித்தலைவராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here