NEVIDAவை வலுப்பபடுத்துவதற்கான கலந்துரையாடல்

0
4

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை (NEVIDA ) மேலும் வலுப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, எதிர்கால திட்டங்கள், தொடர்பாக இன்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மேலும் NEVIDA ஊடாக மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் இதுவரை மலையக வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள், வழங்கப்பட தயாராகவுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் தொடர்பிலும் அதனை வழங்குவதற்கு ஏற்படும் காலதாமதங்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு எவ்வாறு NEVIDA வின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கெளரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கெளரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள், NEVIDA வின் தலைவர், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here