ஜப்பானின் தெற்கு குமாமட்டோ மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகள் சேதமடைந்துள்ளன.
மேலும், ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் சிக்கியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு மருத்துவமனையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக என்.எச்.கே (NHK) தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் பலரும் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பிரதமர் சனாய் தகைச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.
மீட்புப் பணிகளுக்காக 3,600 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

