கொழும்பு, செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடி வேல் வெள்ளி ரத பவனி இன்று (28) காலை ஆரம்பமானது.

ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரத பவனி, காலி வீதி வழியாக ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த போது, ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ்வழிபாட்டு நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் திரு. நந்திக சனத் குமநாயக்க மற்றும் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து காலி வீதி வழியாகப் பயணித்த ரத பவனி கொள்ளுப்பிட்டி சந்தியை வந்தடைந்தபோது, பிரதி அமைச்சருடன், அமைச்சின் அதிகாரிகளும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


