போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்

0
2

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

லெபனானின் நபதியே (யேடியவiநா) மாவட்டத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகள் நடத்திய தீவிரத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்

தங்களை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பு 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாகவே “ஹிஸ்புல்லா பயங்கரவாத இலக்குகளை” நோக்கி இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here