ஹோர்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் அறிவிப்பு: வழமை போல இடம்பெறுவதாக கூறும் டிரம்ப்!

0
7

ஹோர்முஸ் நீரிணையை “மறு அறிவித்தல் வரை” மூடியுள்ளதாக ஈரான் அறிவித்த போதிலும், அங்கு வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

என்.பி.சி (NBC) தொலைக்காட்சியின் ‘மீட் த பிரஸ்’ (Meet the Press) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அறிவிப்புக்கு மாறாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையின்றிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை மேற்பார்வையிடும் CENTCOM, தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் நீரிணையைக் கட்டுப்படுத்தவில்லை.

போக்குவரத்து சீராக நடைபெறுகிறது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்தாலும், முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது திறந்தே இருப்பதாக அமெரிக்கத் தரப்பு வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here