காசா நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அல்-சினாவ் வீதியில் அமைந்துள்ள உலோகப் பட்டறை ஒன்றின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) நடத்திய தாக்குதலில், குறைந்தது நான்கு பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் 7 முதல் தற்போது வரை இடம்பெற்று வரும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 73,221 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தோரின் எண்ணிக்கை 173,643 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2025 அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் குறைந்தது 1,098 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான தாக்குதல்களினால் காசாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
