ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்த பிரித்தானியாவுக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி கப்பல் மீது இன்று அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தாங்கி கப்பல்
பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO), இந்தத் தாக்குதலில் கப்பலுக்குச் சில சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

