ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை, மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற கிழக்கு பகுதிகளை நோக்கி தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்திற்கான வெப்ப அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதோடு, பிரான்சில் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் பகுதியில் ஆரம்பகட்ட கணக்கெடுப்பின்படி வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை (106°F) எட்டியுள்ளது
