அடுத்த மாதம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20I தொடர், FIFA உலகக் கிண்ண ஒளிபரப்புத் தரத்தில் தயாரிக்கப்படவுள்ளதாக ‘ITW Universe’ நிறுவனம் அறிவித்துள்ளது.
FIFA உலகக் கிண்ண இறுதிப்போட்டி மற்றும் செம்பியன்ஸ் லீக் போட்டிகளை இயக்கிய ஜேமி ஓக்ஃபோர்ட் (Jamie Oakford) தலைமையிலான சர்வதேசக் குழு இத்தொடரை இயக்கவுள்ளது.
இதன்படி மைதானத்தில் உள்ள அனைத்துக் கோணங்களையும், வீரர்களின் நகர்வுகளையும் 3D முறையில் நேரலையில் காண்பிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
வினாடிக்கு 600-க்கும் மேற்பட்ட பிரேம்களைப் பதிவுசெய்யும் அல்ட்ரா-ஸ்லோ-மோஷன் கேமராக்கள், AI கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலமான Augmented Reality தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.
செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகள் ‘Sony Sports’ மற்றும் ‘FanCode’ தளங்களில் நேரலை செய்யப்படும்.

