எல்நினோவின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு….

0
3

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்

இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற எல் நினோ நிலைமை குறித்தான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அதிக வெப்பத்துடன்கூடிய வானிலை காரணமாக தோலில் ஏற்படும தடிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் அதிக வெப்பத்திற்கு ஆளாவதால் உயிரிழப்புகள்கூட ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்

இந்த நிலைமைகளுக்கு ஆளாகும் அதிக அபாயத்தைக் கொண்ட குழுக்களாக சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களைக் குறிப்பிடலாம் என வைத்தியர் இனோகா சுரவீர கூறினார்.

அத்துடன், வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த நிலைமையினால் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here