கொங்கோவில் எபோலா பரவலைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அவசரகால உதவிகளை அதிகரிப்பு

0
2

ஜெர்மனி, கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (னுசுஊ) பரவி வரும் எபோலா (நுடிழடய) நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், அண்டை நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தனது அவசரகால நிதி மற்றும் மருத்துவ உதவிகளை அதிகரித்துள்ளது.

கொங்கோவின் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு நிலைமைகள் சீரற்று இருப்பதால், நேரடி ஆட்களை அனுப்புவதற்குப் பதிலாக பரிசோதனைக்கூடங்களை அமைத்தல், பாதுகாப்புக் கருவிகளை (PPநு) விநியோகித்தல் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் (ஊயசவையள) மூலம் ஆதரவளிப்பதில் ஜெர்மனி கவனம் செலுத்துகிறது.

கொங்கோ தவிர, எபோலா பரவக்கூடிய அபாயத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளிலும் பரிசோதனை வசதிகள் மற்றும் விழிப்புணர்வு பயிற்சிகளுக்கு ஜெர்மனி நிதியுதவி அளிக்கிறது.

தற்போதைய தொற்றிற்கு புண்டிபுக்யோ (டீரனெiடிரபலழ) வகை எபோலா வைரஸ் முக்கிய காரணமாக உள்ளது. இதற்குப் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லாததால், பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளே பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகளுக்கு மத்தியில் பரவி வரும் இந்த எபோலா தொற்று, நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான சுகாதார சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here