குர்திஸ்தான் மீது தாக்குதல்! – ஜனாதிபதி செயலகம் கண்டனம்!

0
9

ஈராக்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்திஸ்தான் பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, குர்திஸ்தான் பிராந்திய ஜனாதிபதி செயலகம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குர்திஸ்தான் பிராந்தியத்தை இலக்கு வைப்பதும், திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டுவதும் ஈராக் தலைமைக்கு இழைக்கப்பட்ட மிகக் கடுமையான மற்றும் ஆழமான துரோகமாகும்.”

மேலும், இவ்வாறான கொடூரமான தாக்குதல்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையை முற்றாகச் சீர்குலைப்பதுடன், இப்பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here