“அமெரிக்க வீரர்கள் பலியா?” – ஈரானின் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக மறுத்த அமெரிக்கா!

0
5

சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்க வீரர்களைக் கொன்றதாக ஈரான் வெளியிட்டுள்ள செய்தியை அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

சிரியா – ஜோர்டான் எல்லையிலுள்ள அல்-தன்ப் இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைக் கொன்றதாக ஈரான் தரப்பு உரிமை கோரியிருந்தது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் சிரியா முற்றிலும் மாறுபட்ட ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதமே அமெரிக்கப் படைகள் அந்த இராணுவ முகாமிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாகவும், அங்கு ஈரான் தரப்பிலிருந்து எவ்வித தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என்றும் சிரியா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here