புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈரான் இனி கட்டுப்படாது: ஐ.நா தூதுவர் எச்சரிக்கை

0
8

அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் இனி மதிக்காது என்று ஐ.நாவுக்கான ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளார்.

ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஈரானிய தீவுகள் மற்றும் தெற்கு நகரங்களை இலக்காகக் கொண்டு வொஷிங்டன் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், ஐ.நா சாசனத்தை மிக மோசமாக மீறும் செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இரவானி, “அமெரிக்கா தனது கடப்பாடுகளைத் தொடர்ந்து மீறினால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்ற ஈரான் கடமைப்பட்டிருக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here