ஹோர்முஸ் நீரிணையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மோதல்கள், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) பாரிய ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஓமானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரிச்சர்ட் ஷுமியரர் (Richard Schmierer) தெரிவித்துள்ளார்.
தற்போதைய மோதல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாகப் பாதித்துள்ளதாகவும், இருப்பினும் இரு தரப்பு இராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடரவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 48 மணிநேரம் முக்கியம்: “வரும் 24 முதல் 48 மணிநேரத்திற்குள் பதற்றம் தணியும் என்று நான் நம்புகிறேன்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் 60 நாட்களுக்குள், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஈரான் எந்தவிதத் தலையீடும் செய்யக் கூடாது.
அதேநேரம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்ட நிதி அம்சங்கள் குறித்து, இந்த 60 நாட்களுக்குள் அமெரிக்கா வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஓமானின் பிராந்திய கடல் எல்லை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்த நிலையில், அக் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளதை அமெரிக்காவால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

