வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரு பெரும் நில அதிர்வுகளால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நில அதிர்வினால் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 3,150 பேர் காயமடைந்துள்ளதுடன், 12,721 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் 774 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

