750 உடல்கள் மீட்பு… 3,000 பேரை காணவில்லை – ஹிமாலய எல்லைப் பகுதியில் நேர்ந்த கொடூரப் பேரழிவு!

0
8

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது.

ஐந்தாவது நாளாகத் தொடரும் தீவிர மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், நேபாளத்தில் 734 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 2,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர்.

அதேவேளை, எல்லைப் பகுதியான திபெத்தின் கீராங் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 546 பேர் காணாமல் போயுள்ளதாகச் சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், அடர்ந்த சேறு மற்றும் மேலதிக வெள்ள ஆபத்துகளுக்கு மத்தியிலும் சீனா மற்றும் நேபாள மீட்புக் குழுவினர் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, அடையாளங்காணப்படாத உடல்களின் DNA மாதிரிகளைச் சேகரித்த பின்னரே, இறுதிச் சடங்குகளுக்காக நேபாள அரசு உடல்களை அடக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here