3ஆவது T20 – நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி!

0
10

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடத்து, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட லஹிரு உதாரா 10 ஓட்டங்களில் சோனி பேக்கரின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த கமில் மிஷாராவும் நீடிக்க முடியாமல், வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஓவர்டனிடம் கேட்ச் கொடுத்து 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தது.

தற்போது இலங்கை அணி 4.6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சரித் அசலங்க ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் மற்றும் சோனி பேக்கர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here