ஹோர்முஸ் நீரிணை வரைபடத்தைப் பகிர்ந்து அதிரடி கிளப்பிய ட்ரம்ப்

0
2

அமெரிக்க ஜனாதிபதி தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் வரைபடத்தைப் பகிர்ந்துள்ள அவர், அதற்கு “புதிய அமெரிக்கப் பிராந்தியம்” எனத் தலைப்பிட்டுள்ளார்.

ஈரானின் “சரணைத்” தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் என அவர் கடந்த வாரம் விடுத்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இந்தச் பதிவு பார்க்கப்படுகிறது.

சர்வதேசக் கடல் வழியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதி குறித்து அமெரிக்க ஜனாதிபதி பதிவிட்டுள்ள கருத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் அரசியல் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here