ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் அதிரடி!

0
2

கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையில் தனது எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது எண்ணெய் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்தநிலையில், சவூதி அராம்கோ கடந்த வாரம் முதல் ஹோர்முஸ் நீரிணை வழியாக மீண்டும் மசகு எண்ணெய் ஏற்றும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும், ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா கடற்கரைக்கு அருகே கப்பலுக்குக் கப்பல் மாற்றும் முறை மூலமாகவும் மசகு எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 12 முதல் 16 வரை ஜுவைமாமற்றும் ராஸ் தனுரா முனையங்களில் இருந்து மூன்று ராட்சத எண்ணெய் கப்பல்களில் தலா 20 லட்சம் பேரல் மசகு எண்ணெய் ஏற்றப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சவூதி ஏற்றுமதியின் இந்த மீள்வருகை, கனரக கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும் என்றும், கப்பல்களுக்கான எரிபொருள், பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here