அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்காக விண்வெளியில் சுற்றுப்பாதை ஆயுதங்கள் (On-orbit space control weapons) நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வான்படைச் செயலாளர் டிராய் மேங்க் (Troy Meink) முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், எதிரி நாடுகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்கவும் இந்த ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேரிலாந்தில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் விண்வெளியில் புதிய தாக்குதல் திறன்களைச் சோதித்து வரும் நிலையிலேயே, அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இருப்பினும், இந்த ஆயுதங்கள் குறித்த மேலதிக விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ ஏவுகணைத் தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி சார்ந்த இடைமறிப்பு திட்டம் ஓராண்டுக்குள்ளேயே தயாராகிவிட்டதாகவும் வான்படைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

