வட காஸாவில் இரவில் நடத்தப்பட்ட அதிரடி வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் பிரிவைச் சேர்ந்த ஜபலியா படைப்பிரிவின் தளபதி அகமத் பாதாஷ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அகமத் பாதாஷ், ஜபலியா படைப்பிரிவுக்கான ஆயுதங்களை நிர்வகித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொண்டு வந்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
“எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிப்பதற்காக நமது பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து அங்கே நிறுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று இஸ்ரேலிய ராணுவம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

