யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வெளியேற்றம்

0
2

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (12) காலை 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவரிடம், நடைமுறைக்கு மாறாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் ஒன்று தொடர்பான விசாரணைகள் நிமித்தம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை ஏற்கனவே பல சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே யோஷித ராஜபக்சவிடம் விசாரணை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரால் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் மேலதிக பல சொகுசு வாகனங்கள் தொடர்பிலும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here