சவூதி அரேபியாவின் ஜித்தாவில், சவூதி முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஆகியோருக்கு இடையிலான உயர்மட்டச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின் போது, சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய கள நிலவரங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகள் குறித்தும் தலைவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர்.
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இரு முக்கிய அரபு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு பிராந்திய அமைதியில் முக்கியத்துவமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

