லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அடர்ந்த குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சர்வதேச மனிதநேய சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) தெரிவித்துள்ளார்.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா குழுவொன்று லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பகுதியைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், மனிதநேய சட்டக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளமை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தப் பொறுப்புக்கூறல் மிக அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
