பாலஸ்தீன கிராமத்தை சுற்றி வளைத்த இஸ்ரேலிய ராணுவம்!

0
3

மேற்கத்தியக் கரையின் நப்லஸ் பகுதியில் அமைந்துள்ள Qusra கிராமத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமத்தின் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருந்த கிராம மக்கள், ராணுவத்தினர் வீடுகளுக்குள் புகுந்து தங்களை வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், கிராமத்தின் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் Al Jazeera ஊடகத்திடம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், கிராமவாசிகள் தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ராணுவத்தின் புதிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த ஒரு பாலஸ்தீன குடும்பத்தின் வீட்டிற்குள் படைகள் நுழையாது என்றும் ராணுவம் உறுதி அளித்துள்ளது.

அந்த வீட்டைச் சுற்றி குடியேற்றவாசிகளால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம் அகற்றப்பட்டுவிட்டதாக ராணுவம் கூறிய போதிலும், அப்பகுதியில் இன்னும் குடியேற்றவாசிகள் தங்கியிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here