நிறைவுற்றது ‘ProFood ProPack & AgBiz 2026’ கண்காட்சி

0
9

இலங்கையின் உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விவசாயத் துறைகளுக்கான முன்னணி சர்வதேசக் கண்காட்சியான ‘ProFood ProPack & AgBiz 2026’ கண்காட்சியின் 23ஆவது பதிப்பு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக இடம்பெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஓகஸ்ட் 21 முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் சுமார் 30,000 பேர் கலந்துகொண்டதுடன், தொழில்துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் இதில் ஒன்றிணைந்திருந்தனர்.

இலங்கை உணவுப் பதப்படுத்துவோர் சங்கம் (Sri Lanka Food Processors Association – SLFPA) மற்றும் Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd – LECS ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இக்கண்காட்சியானது, 6 பிரதான காட்சி மண்டபங்களில் 30 இற்கும் மேற்பட்ட சர்வதேச கூடங்கள் உள்ளிட்ட சுமார் 450 கூடங்களைக் கொண்டிருந்தது. தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர ஆகியோர் இதன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டனர். தொழில் அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகோலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here