தனுஷின் ‘ஓம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

0
7

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அக்டோபர் 15 அன்று ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ வெளியாவதாலும், தீபாவளி பண்டிகையை ஒட்டி சூர்யாவின் ‘சீன்’ படம் வெளியாவதாலும், அந்த மோதலைத் தவிர்க்கும் பொருட்டு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுப்புடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here