ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில், கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மொனாகோவின் வாலண்டின் வசராட்-ஐ எதிர்கொண்டார்.
இப்போட்டியில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 எனக் கைப்பற்றினார்.
இருப்பினும், அதன்பிறகு மீண்டு எழுச்சி பெற்ற வசராட் அடுத்தடுத்த செட்களை 7-6 (7-5), 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் தொடரின் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

