தந்தையின் மறைவால் ஓய்வு முடிவை பரிசீலிக்கும் மெஸ்ஸி!

0
5

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியின் தந்தையும் அவரது பிரதிநிதியுமான ஜோர்ஜ் மெஸ்ஸி, நீண்டகால நோயுற்றிருந்த நிலையில் தனது 68ஆவது வயதில் காலமானார்.

14 வயது முதலே மெஸ்ஸியின் விளையாட்டு வாழ்க்கையிலும் ஒப்பந்தங்களிலும் முக்கிய பங்காற்றியவர் அவரது தந்தை ஆவார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ள 39 வயதான மெஸ்ஸி, “நீ இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இனி எப்படித் தொடரப் போகிறேன் என்பதும் புரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் இதுவரை கால்பந்து மட்டுமே விளையாடி வந்தேன். ஆனால் இனிமேலும் அதைத் தொடர்ந்து விளையாடுவேனா என்பதில் எனக்குப் பெரிய சந்தேகம் உள்ளது” எனக் கூறி, தனது கால்பந்து பயணத்தை நிறுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here