கொஸ்மல்லியின் மைத்துனர் கொலை – வௌியான புதிய தகவல்கள்

0
8

ஒழுங்கடமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ்மல்லி’ என்பவரின் மிக நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற ‘பூத கழுவா’ வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 21 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள், 4 வாள்கள் உட்பட பல ஆயுதங்கள் மற்றும் 4 கைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முகங்களை மூடிய நால்வரடங்கிய கும்பல் ஒன்று கடந்த 7 ஆம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து, ‘பூத கழுவா’ இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவர் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோதே கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இக்கொலையைச் செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

இவ்வாறு கொல்லப்பட்ட தமித் பிரசாத் பொன்சேகா தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.

இவர் ‘கொஸ்மல்லி’ என்பவருடன் டுபாயில் சில வருடங்கள் தங்கியிருந்துள்ளதுடன், அங்கு அவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில வாரங்களுக்கு முன்னரே மீண்டும் நாட்டிற்குத் திரும்பியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘பூத கழுவாவைக் கொலை செய்ய வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படம் CCTV காணொளிகள் மூலம் பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பதிவு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here