கொழும்பு-15 மட்டக்குளியில் கொடூர வீதி விபத்து: நால்வருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

0
6

கொழும்பு 15, மட்டக்குளி – அளுத்மாவத்தை வீதி, கந்தஉட பகுதிச் சந்தியில் கொட்டாஞ்சேனை நோக்கிச் செல்லும் வீதியில் கொடூர வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாட்டை இழந்த கார், பாதையிலிருந்த மூன்று ஆட்டோக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து மிகவும் பாரதூரமானதாக உள்ளதால் இதில் நால்வருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்திருப்பதை நேரில் பார்த்தவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், உயிருக்குப் போராடியவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here