ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு!

0
2

கொழும்புடனான பிரதான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், ஒருகொடவத்தை – அம்பத்தலே பிரதான வீதியிலுள்ள மூன்று முக்கிய பாலங்களின் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 2/3 களு பாலம் மற்றும் இலக்கம் 9/1 பாலம் ஆகியவற்றின் பணிகள் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 4/1 பாலத்தின் பணிகள் 2027 மே மாதத்திற்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OPEC சர்வதேச அபிவிருத்தி நிதியம் (OFID) மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD) ஆகியவற்றின் நிதியுதவியுடன், ரூபா 1.546 பில்லியன் செலவில் இந்தப் பாலங்கள் அமைப்பட்டு வருகின்றன.

7.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியில், வெல்லம்பிட்டி, கொட்டிக்காவத்தை, அங்கொட மற்றும் அம்பத்தலே உள்ளிட்ட சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே இவ்வீதி தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய அடையாளம் காணப்பட்ட 8 பாலங்களில் 5 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here