“எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இதுவரை எந்த யோசனையும் இல்லை! — அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ”

0
9

நாட்டில் தற்போதைக்கு எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றும், விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எந்தவொரு பரிந்துரையையும் முன்வைக்கவில்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.”

நாடு தற்போது ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளையே பயன்படுத்தி வருகின்றது.

இதன் காரணமாக, இந்த கட்டத்தில் எரிபொருள் விலைகளை திருத்துவது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் எந்தவொரு கலந்துரையாடலும் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தை விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சவால்களை எதிர்கொண்டு வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்கு நிவாரணங்களை வழங்கியிருந்தது.

இந்நிவாரண நடவடிக்கைகளுக்காக திறைசேரியில் இருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே இலங்கையில் எதிர்கால எரிபொருள் விலை குறித்த தீர்மானங்கள் அமையும்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றதா என்பதை தீர ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here