இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்: இதுவரை 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 61 பேர் உயிரிழப்பு! Video

0
8

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் (30) கொழும்பில் கருத்துத் தெரிவித்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷிலா சமரவீர, இந்த ஆண்டில் இதுவரை 84,091 டெங்கு நோயாளர்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், 61 மரணங்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 28,717 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், நாட்டில் இன்னும் 175 பகுதிகள் அதி-அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக, வீடுகளைச் பரிசோதித்து கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்த பின்னரும் மீண்டும் அத்தகைய இடங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் வேறு எந்த மருந்துகளையும் பயன்படுத்தாமல் பெரசிட்டமோல் (Paracetamol) மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனைகளை முறையான முறையில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here