அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

0
9

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (23) முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இஹலகம, கலா வாவி, மருதன்கடவல, திருப்பனை மற்றும் கெக்கிராவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக தேவையான நீரைக் முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், நீர் விநியோகம் சீரமைக்கப்படும் வரை நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அச்சபை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here