விமானத்தில் லேப்டாப் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

0
4

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரின் மடிக்கணிணி எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

அட்லாண்டாவிலிருந்து டெக்சாஸ் நோக்கிப் பயணித்த AA 2398 என்ற விமானம், தரையிறங்கும் தருவாயில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

விமானத்தின் பின்புறத்தில் புகை மற்றும் தீ மூண்டதைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.

விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மடிக்கணிணியில் பயன்படுத்தப்படும் ‘லித்தியம் பேட்டரிகள்’ அதிக வெப்பமடைவதாலேயே இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் விமானங்களில் லித்தியம் பேட்டரிகள் மூலமாக புகை அல்லது தீப் பற்றிய 58 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here