விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இணைந்த ‘ரணபாலி’! மிரட்டலான டீசர் ரிலீஸ்!

0
7

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது!

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம், இந்திய வரலாற்றின் மறக்கப்பட்ட ஒரு கருப்புப் பக்கத்தைப் பேசுகிறது.

1876 முதல் 1878 வரையிலான பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடூரமான பஞ்சம், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிரான இந்தியர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here