மேற்குக்கரையில் பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிக்கும் முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு

0
5

தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பெயித் சாஹுர் அருகே, பாலஸ்தீனருக்குச் சொந்தமான தனியார் நிலத்தில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய குடியேற்றவாசி ஒருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய தோடு, பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய ஆர்வலர்களை நோக்கித் தன் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தியுள்ள காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நிலத்தின் பாலஸ்தீன உரிமையாளர்களுடன் சுமார் 100 ஆர்வலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.

அந்த பகுதியிலிருந்த இஸ்ரேலியக் கொடிகளை அகற்றிவிட்டு, பாலஸ்தீனக் கொடிகளை ஆர்வலர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here