இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில வகை மோட்டார் வாகனங்களுக்கான 50% சுங்கத் தீர்வை கூடுதல் கட்டணம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, இந்த நீடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 15 திகதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, 2026 டிசம்பர் 31 திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சாரத்தில் (Electric) இயங்கும் மோட்டார் கார்கள் உட்படப் பல வகை வாகனங்களுக்கு இந்த 50% கூடுதல் கட்டணம் தொடர்ந்து விதிக்கப்படும்.
இருப்பினும், 2026 மே 15 திகதிக்கு முன்னதாக கடன் கடிதங்களை (Letter of Credit) பதிவு செய்த வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.
ஆனால், அந்த கடன் கடிதங்களின் வாகன இலக்கங்கள், தொழில்நுட்ப விபரங்கள் திருத்தப்பட்டிருந்தாலோ அல்லது கப்பலில் ஏற்றப்பட்ட திகதி (Shipped-on-board date) 2026 நவம்பர் 15 திகதிக்கு பிந்தையதாக இருந்தாலோ இந்த கூடுதல் கட்டணம் கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டும் எனச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

