மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்பு (திருத்தச்) சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினம் முற்பகல் 11:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை சுமார் 6 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து, இந்த சட்டமூலம் பிரிவினை கோரப்படாமல் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம், 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 (ஒரு இலட்சம் ரூபாய்) ஆக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

