பிணை கிடைத்தபோதிலும் ராஜிதவின் சகோதரர் விளக்கமறியலில்

0
10

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யத் தவறியமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறும், அவரது வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், பிணை நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் ஆவார்.

‘ஊழல்’ எனும் குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (18) காலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here