எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20I போட்டிகள், முக்கோண ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை அணி ஒக்டோபர் 4 ஆம் திகதி பாகிஸ்தான் சென்றடையும்.
3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒக்டோபர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டியில் நடைபெறும்.
அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இங்கிலாந்து அணியும் இணைந்து கொள்ளும் முக்கோண ஒருநாள் தொடர் ஒக்டோபர் 18 முதல் 31 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறும்.
முதலாவது போட்டி ஒக்டோபர் 18 இல் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் – இலங்கை இடையே நடைபெறும்.
லாகூர் கடாபி மைதானத்தில் ஒக்டோபர் 31 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.
முக்கோணத் தொடரைத் தொடர்ந்து இலங்கை அணி நவம்பர் 4 முதல் 6 வரை இஸ்லாமாபாத்தில் 3 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.
முதலாவது டெஸ்ட் போட்டியை நவம்பர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை நவம்பர் 17 முதல் 21 வரை லாகூரிலும் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

