ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா – இஸ்ரேல் போர்? பேராசிரியரின் அதிர்ச்சி கணிப்பு!

0
2

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்கள் தோல்வியடைந்துள்ளதாக தெஹ்ரான் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் மொஸ்தஃபா கோஷ்செஷ்ம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இருசுற்று போர்கள், தசாப்தங்களாக வொஷிங்டன் விதித்து வந்த பொருளாதார அழுத்தங்கள் பலனளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

அத்தியாவசிய இறக்குமதிகள் மற்றும் நிதிச் சந்தைகளை அணுகுவதற்கு ஈரான் தனது அண்டை நாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட மாற்று வழிகளைப் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலாகப் பொருளாதார அழுத்தம் பற்றிப் பேசுவது சந்தைகளை ஸ்திரப்படுத்தவும், எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவுமே ஆகும்.

எதிர்வரும் இலையுதிர்காலத்தில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதலை முன்னெடுக்கும் எனத் தான் நம்புவதாகப் பேராசிரியர் மொஸ்தஃபா கோஷ்செஷ்ம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here