2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஒகஸ்ட் முதலாம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் க.பொ.த உயர்தர பரீட்சை 2027 ஒகஸ்ட் 3 முதல் ஒகஸ்ட் 28 வரை நடைபெறும்.
மேலும் க.பொ.த சாதாரண தர பரீட்சை 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மைகருதி இந்த அட்டவணை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

