“நெதர்லாந்தில் தொடர் ரயில் தண்டவாளங்களில் சதி வேலை: தலைநகரில் ரயில் சேவை முற்றாக முடக்கம்!”

0
8

நெதர்லாந்தில் ரயில் தண்டவாளங்களில் உலோகக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திட்டமிட்டு வைக்கப்பட்டதால், தலைநகர் ஆம்ஸ்டர்டாம் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ரயில் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மனித முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சதிச் செயல் என அந்நாட்டின் ரயில் உள்கட்டமைப்பு நிறுவனமான ப்ரோரயில் தெரிவித்துள்ளதை அடுத்து, தேசிய பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.”

செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் நெதர்லாந்தின் பல பகுதியிலுள்ள ரயில் தண்டவாளங்களில் சிக்னல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்தன.

சோதனையின் போது, சுமார் 24 இடங்களில் தண்டவாளங்களில் 1.5 மீற்றர் (5 அடி) நீளமுள்ள உலோகக் குழாய்கள் மற்றும் பிற பொருட்கள் திட்டமிட்டுப் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆம்ஸ்டர்டாம், ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல், சுஹிபோல் சர்வதேச விமான நிலையப் பாதைகள் மற்றும் உட்ரெக்ட் போன்ற பிரதான இரயில் சந்திப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு மிகப்பரவலாக ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பயணிகளுக்குப் பதிலாகப் பேருந்இயக்குவது சாத்தியமற்றது என நெதர்லாந்து தேசிய ரயில் சேவை நிறுவனம தெரிவித்துள்ளது.

இந்த சதிச் செயலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது இதன் நோக்கம் என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தடயங்கள் அழியாத வகையில் உறைகளை அணிந்து அதிகாரிகள் பொருட்களை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here