டொனால்ட் டிரம்ப் பங்கு வர்த்தகம்: பிக் டெக் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் கோடிக்கணக்கான முதலீடுகள்

0
10

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரு நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான துறைகளில் மேற்கொண்ட கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பங்கு வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய நிதிவெளிப்படுத்தல் ஆவணங்களின்படி, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கு விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒட்டுமொத்த மதிப்பு மில்லியன் கணக்கில் (சுமார் $79 மில்லியன் முதல் $270 மில்லியன் வரை) மதிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் (Amazon) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளை அவர் பெருமளவில் விற்றுள்ள அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகள் (Chips), தரவு மையங்கள் (Data Centers), மற்றும் சைபர் செக்யூரிட்டி தொடர்பான நிறுவனங்களில் தனது முதலீடுகளை மாற்றியமைத்துள்ளார்.

டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல் டெக்னாலஜிஸ் (Dell Technologies), மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology), பிராட்காம் (Broadcom) மற்றும் ஜிகே வெர்நோவா (GE Vernova) போன்ற AI மற்றும் தரவு மைய உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here